"தேசியக் கல்விக் கொள்கையில் பொறியியல் கல்விக்கு முக்கியத்துவம் இல்லை'

தேசிய வரைவுக் கல்விக்கொள்கையில் பொறியியல் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று குடியரசு

தேசிய வரைவுக் கல்விக்கொள்கையில் பொறியியல் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ்  பேசினார்.
மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் சார்பில் தேசிய வரைவுக்கல்விக்கொள்கை 2019 குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு மடீட்சியா தலைவர் கே.பி.முருகன் தலைமை வகித்தார். கருத்தரங்கில்  வி.பொன்ராஜ் பேசியது:  மத்திய அரசு தேசிய வரைவுக் கல்விக்கொள்கை 2019 அறிவித்துள்ளது. இதில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன. இந்தியாவில் தற்போது சிபிஎஸ்சி கல்வித்திட்டம் மிகச்சிறப்பான திட்டமாக உள்ளது. இதற்கு காரணம் கடந்த 2003-இல் அப்துல் கலாம் உள்ளிட்டோர் சிபிஎஸ்சி கல்வித்திட்டத்துக்கான புதிய கல்விக்கொள்கையை உருவாகிக்கிக் கொடுத்தனர். அதன்பின்னரே அந்த கல்வித்திட்டம் வரவேற்பை பெற்றது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில் பள்ளிக்கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 
உயர்கல்வியில் மாணவர்கள் சாதிக்க வேண்டுமென்பதற்காகவே 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை செமஸ்டர் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் இளங்கலை படிப்புகள் மூன்றாண்டில் இருந்து நான்கு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 4 ஆண்டுகளில் பல்வேறு தொழில் திறன்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் 4 ஆண்டுகளில் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர் அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்று வெளியேறுவார். இதேபோல ஆசிரியர் கல்வியும் 4 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது அல்ல. மாணவர்களிடம் மறைந்திருக்கும் தனித்திறன்களை வெளிப்படுத்தி அவர்களை ஆளுமைத்திறன் மிக்கவர்களாக உருமாற்றுவதுதான் ஆசிரியரின் கடமை  என்றார். 
கருத்தரங்கில் கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா மற்றும் மடீட்சியா நிர்வாகி ஏ.செல்வராஜ்,  மடீட்சியா அறக்கட்டளை தலைவர் கே.ஆர்.ஞானசம்பந்தன் ஆகியோர் பேசினர். கௌரவச்செயலர் பி.முருகானந்தன் நன்றியுரை வழங்கினார். கருத்தரங்கில் கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com