ராணுவத்திற்கு ஆள்கள் தேர்வில் விதிகளை பின்பற்றாமல் அறிவிப்பாணை: மத்திய பாதுகாப்புத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

விதிகளைப் பின்பற்றாமல் ராணுவத்திற்கு ஆள்கள் தேர்வு செய்வதற்கு வெளியான அறிவிப்பாணையை ரத்து

விதிகளைப் பின்பற்றாமல் ராணுவத்திற்கு ஆள்கள் தேர்வு செய்வதற்கு வெளியான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய பாதுகாப்புத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: 
இந்திய ராணுவம் 2018 பிப்ரவரியில் ராணுவத்திற்கு ஆள்கள் தேர்வு செய்வதற்கு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு விண்ணப்பித்து,  உடல்தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இதையடுத்து 2018 ஜூலையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியானது. அதில் 22 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த பட்டியலில் எனது பெயர் இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது காலிப்பணியிடங்கள் இல்லை எனத் தெரிவித்தனர். 
இந்திய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பாணையில், பணியிடங்களின் எண்ணிக்கை உள்பட ராணுவத்திற்கு ஆள்கள் தேர்வு செய்வது குறித்த முறையான அறிவிப்புகள் இல்லை. எனவே அந்த அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு விதிகளை பின்பற்றி முறையான அறிவிப்பாணையை வெளியிட்டு ராணுவத்திற்கு ஆள்கள் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு குறித்து மத்திய பாதுகாப்புத்துறை செயலர், முதன்மை ராணுவ அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com