Enable Javscript for better performance
இந்தியாவின் தனித்துவ அடையாளம் ஆன்மிகம்: சுவாமி கமலாத்மானந்தர்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் தனித்துவ அடையாளம் ஆன்மிகம்: சுவாமி கமலாத்மானந்தர்

    By DIN  |   Published on : 14th September 2019 04:52 AM  |   அ+அ அ-   |    |  


    இந்தியாவின் தனித்துவ அடையாளமாக ஆன்மிகம் திகிழ்கிறது என மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தெரிவித்தார்.  
    திருநகரில் நாராயண குருதேவரின் 165 ஆவது ஜயந்தி விழா மற்றும் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகித்துப் பேசியது:  உலகில் மனிதர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தனித்துவம் உள்ளது. இதேபோல ஒவ்வொரு நாட்டிற்கும்  ஒரு  தனித்துவம் உள்ளது. அதில் இந்தியாவின் தனித்துவ அடையாளமாக ஆன்மிகம் விளங்குகிறது.  
    ஆன்மிகமே இந்தியாவின் முதுகெலும்பாகவும், உயிர்மூச்சாகவும் உள்ளது.  இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், பெளத்தர் என இருப்பது முக்கியமில்லை. நல்லவராக இருத்தலே முக்கியமானது. எந்த மதத்தையும் சிரத்தையுடன் பின்பற்றினால் நமக்கு வெற்றி நிச்சயமாகும். ஆன்மிக சிந்தனை நம் அனைவரின் ரத்தத்திலும் உள்ளது என்றார்.       
    சிவானந்த தபோவன தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்தா: இறைவனின் படைப்பில் வேற்றுமை இல்லை. ஆகவே நமக்கும் வேற்றுமை இருக்க்கூடாது. ஜாதி, மதங்களால் நாம் பிரிந்து விடாமல் நாம் அனைவரும் மனித ஜாதி என ஒன்றுபடவேண்டும். இறைவன் எங்கும், எல்லாவற்றிலும் இருக்கிறான். சுவாமி சிவானந்தர் ஜாதி மத பேதமில்லாமல் ஒன்றுபட்ட சமுதாயத்தை  உருவாக்கவே உழைத்தார். நல்லவனாக  இரு, நல்லதையே செய் என்ற தாரக மந்திரத்தை நமக்கு அளித்தார் என்றார். 
    நிகழ்ச்சியில் பரமேஸ்வரி வித்யா மடத்தின் நிர்வாகி சீனிவாசானந்தா, விளாச்சேரி பள்ளிவாசல் இமாம் எஸ்.முகமது இத்திஸ், சங்கரன்கோவில் பெளத்த துறவி மாசோ இஸ்ஹிதானி, புத்த பிக்குனி லீலாவதி ஆகியோர் பங்கேற்றனர். 
    முன்னதாக சாந்தலிங்க சுவாமி மடத்தின் செயலர் வெங்கடேஷ்வரானந்தா வரவேற்றார். காலை 10 மணிக்கு சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. 
    தொடர்ந்து திருநகர் மடத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் சாந்தலிங்க சுவாமி மடத்தில் நிறைவடைந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp