Enable Javscript for better performance
குப்பைகளை கையாளும்போது பாதுகாப்பு உபகரணங்களை அணிய ஆணையர் அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    குப்பைகளை கையாளும்போது பாதுகாப்பு உபகரணங்களை அணிய ஆணையர் அறிவுரை

    By DIN  |   Published on : 14th September 2019 04:53 AM  |   அ+அ அ-   |    |  

    குப்பைகளை கையாளும்போது  பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் தெரிவித்தார்.
    மதுரையில் துப்புரவுப் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை தொடர்பான  2 நாள்கள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.  நகராட்சி நிர்வாக ஆணையம் சார்பில் இப்பயிற்சி முகாமை மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் தொடக்கி வைத்தார்.  அப்போது அவர், மதுரை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வாங்க வேண்டும்.  மேலும் குப்பைகளை கையாளும்போது  பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்.மது போதைக்கு அடிமையான பணியாளர்கள் மாநகராட்சி மது போதை மறுவாழ்வு மையத்தை அணுகி சிகிச்சை பெறலாம் என்றார். 
    இந்த பயிற்சி முகாம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு முகாமும் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. முகாமில் 60 பணியாளர்கள் வீதம் 480 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மதுரை மாநகராட்சி, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் திடக்கழிவுகளின் வகைகள்,  தரம்பிரித்தல், அபாயகரமான கழிவுகளை வகைப்படுத்துதல், மறுசுழற்சிக்கு உகந்த கழிவுகள், மறுசுழற்சிக்கு பயன்படாத கழிவுகள், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை பராமரிக்கும் முறைகள் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் வருவாய் ஈட்டுதல், பணியிடங்களில் விளையும் ஆபத்து மற்றும் நோய் தொற்று அபாயம், பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், தன்சுத்தம் பேணுதல் ஆகியவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. 
    முகாமில் உதவி நகர்நல அலுவலர் இஸ்மாயில் பாத்திமா, சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், சிவசுப்ரமணியன், ராஜ் கண்ணன், வீரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp