Enable Javscript for better performance
மகளிர் கல்லூரியில் ஹிந்தி தின விழா- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் கல்லூரியில் ஹிந்தி தின விழா

    By DIN  |   Published on : 14th September 2019 04:46 AM  |   அ+அ அ-   |    |  

    மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஹிந்தி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    கல்லூரியின் ஹிந்தி துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான நிலைய ஆணையத்தின் மொழித்துறை அதிகாரி எஸ்.அயூப் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஹிந்தி தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி, ஹிந்தி மொழியின் சிறப்பு குறித்து உரையாற்றினார். 
    மேலும் ஹிந்தி தினத்தையொட்டி இந்திய வங்கியின் சார்பிலும் மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ஹிந்தித்துறை பேராசிரியைகள் செய்திருந்தனர்.

    kattana sevai