Enable Javscript for better performance
மதுரையில் பலத்த மழை: கட்டடம் இடிந்து இரு சக்கர வாகனங்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் பலத்த மழை: கட்டடம் இடிந்து இரு சக்கர வாகனங்கள் சேதம்

    By DIN  |   Published on : 14th September 2019 05:00 AM  |   அ+அ அ-   |    |  

    மதுரையில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த  பலத்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இரு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.  
    மதுரையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கோடைக்காலம் போன்று வெயில் சுட்டெரித்து வந்தது. அனல் காற்றும் வீசியது. இதனால் கடும் வெப்பத்தில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். கடந்த புதன்கிழமை லேசான சாரல் மழை பெய்தது. 
    இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை பலத்த மழையாக மாறியது. மதுரை பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பாலை, ஊமச்சிகுளம், பழங்காநத்தம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. 
    மேலும் மாலை 4 மணிக்கே நகர் முழுவதும் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை ஓட்டினர். ஏறக்குறைய 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. 
    தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். நீண்ட நாள்களுக்கு பிறகு பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
    கட்டடம் இடிந்து விழுந்தது: பலத்த மழையால் பயன்பாடற்ற இருமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மதுரை கீழ ஆவணி மூல வீதியில் குன்னத்தூர் சத்திரம் அருகே தனியாருக்குச் சொந்தமான இரு மாடிக் கட்டடம் இருந்தது. 
    நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் கட்டடம் பாழடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தபோது கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டடம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் கட்டட இடிபாட்டில் சிக்கி சேதமடைந்தன. 
    மேலும் கட்டடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள மின் வயர்கள் சேதமடைந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. 
    இதுகுறித்த தகவலின்பேரில் மதுரை நகர் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச்சென்று இடிபாடுகளில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று மின் வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    மேலூர்: மேலூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp