Enable Javscript for better performance
மேலூர் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி- Dinamani

சுடச்சுட

    

    மேலூர் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி

    By DIN  |   Published on : 14th September 2019 05:01 AM  |   அ+அ அ-   |    |  

    மேலூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலை தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தார். 
    சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி முத்துலட்சுமி (70). இவர் உள்ளிட்ட சிலர்  சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். மேலூர் புறவழிச் சாலையில் தெற்குப்பட்டி அருகே சாலை நடுப்புறத் தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி சிகிச்சைக்காக மேலூர்அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் தேவி (35), கமத் ஸ்ரீ (16), விக்னேஷ் (13), கார் ஓட்டுநர் ரமேஷ் (42) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
    லாரி கவிழ்ந்து விபத்து: மதுரையிலிருந்து சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிச்சென்ற லாரி, மேலூர்-சிவகங்கை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மழை நேரத்தில் வண்ணாம்பாறைப்பட்டி அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த ராஜா மகன் மணிகண்டன் (39) லேசோன காயங்களுடன் தப்பினார். அவர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கீழவளவு போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    kattana sevai