Enable Javscript for better performance
மேலூர் பேருந்து நிலையத்தில் மாமனாரை குத்திக் கொலை செய்த மருமகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    மேலூர் பேருந்து நிலையத்தில் மாமனாரை குத்திக் கொலை செய்த மருமகன் கைது

    By DIN  |   Published on : 14th September 2019 04:51 AM  |   அ+அ அ-   |    |  

    குடும்பப் பிரச்னை காரணமாக மேலூர் பேருந்து நிலையத்தில் மாமனாரை கத்தியால் கழுத்தில் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகிலுல்ள அலங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கையா (65). இவரது மகள் தனம். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த உறவினர் நல்லமணி (45) என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கோயம்புத்தூர் அருகிலுள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் வசித்தனர். நல்லமணி வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கணவர்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனம் தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். நல்லமணிக்குச் சொந்தமான இடத்தில் தங்கையா வீடுகட்டினாராம். இதுதொடர்பாகவும் இருவரிடையே பிரச்னை இருந்துள்ளது. இதனிடையே சில மாதங்களுக்கு முன் தனம் மகளிர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை  அலங்கம்பட்டியிலிருந்து தங்கையா பேருந்தில் மேலூர் வந்தார். மேலூர் பேருந்து நிலையம்  முன்பு தங்கையாவுடன் நல்லமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
     அப்போது, நல்லமணி மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கையாவை கழுத்தில் குத்தினார். இதில் தங்கையா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அருகிலிருந்தவர்கள் நல்லமணியைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp