Enable Javscript for better performance
விவேகானந்தரின் அறிவுரையை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்: துணைவேந்தர்- Dinamani

சுடச்சுட

    

    விவேகானந்தரின் அறிவுரையை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்: துணைவேந்தர்

    By DIN  |   Published on : 14th September 2019 04:54 AM  |   அ+அ அ-   |    |  

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய  சொற்பொழிவின் 125 ஆவது நினைவு தினத்தையொட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை பல்கலைக்கழக துணை வேந்தர் மு.கிருஷ்ணன் தொடங்கி வைத்துப் பேசியது: 
     சுவாமி விவேகானந்தர் மன வலிமை மட்டுமின்றி உடல் வலிமையும் வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல மாணவர்கள் உடல் வலிமையும்,  மன வலிமையும் பெறவேண்டும்.  மனமும், உடலும் வலிமை பெறும்போது செய்யும் செயல்கள் ஆற்றல் மிக்கதாக இருக்கும். மன வலிமை, உடல் வலிமை, தைரியம் மூன்றும் சேரும்போது பணிவும், அன்பும், பண்பும் கைகூடும். இந்த குணங்கள் கைவரப்பெற்றால் நம் நாடு சிறந்த நாடாக விளங்கும். ஆனால் அதற்கு கல்வியும் முக்கியமான ஒன்று என்பதை மாணவர்கள் உணர வேண்டும். விவேகானந்தரின் அறிவுரையை பின்பற்றி மாணவர்கள் நடக்கும் பட்சத்தில்  நம்நாடு வல்லரசாக மாறும் என்பதில் ஐயமில்லை. செல்லிடப்பேசியை தகவல் தொடர்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்.
    கருத்தரங்கில் 38 கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும் விவேகானந்தரைப் போன்று வேடமணிந்த மாணவ, மாணவியர் சுவாமி விவேகானந்தரை பற்றிய உரையும் ஆற்றினர். 

    kattana sevai