ரத்த தானத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி: கல்லூரி மாணவ-மாணவியர் பங்கேற்பு

மதுரையில் ரத்த தானத்தை வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.


மதுரையில் ரத்த தானத்தை வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையின் ரத்த வங்கி சார்பில், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உதிரம்-19 என்ற பெயரில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் துவங்கிய மாரத்தான் போட்டியை, மதுரை  மாநகர் காவல் துணை ஆணையர் ஜெ. மகேஷ் தொடக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 1,500 பேர் கலந்துகொண்டனர். 
கல்லூரி மாணவர்கள், சிவகங்கை சாலை, அண்ணா சாலை, மேலூர் பிரதான சாலை, அழகர்கோவில் பிரதான சாலை, தேவர் சிலை என 5.7 கிலோ மீட்டர் தொலைவு ஓடி மீண்டும் மருத்துவக் கல்லூரியை அடைந்தனர். 
இதேபோன்று, கல்லூரி மாணவிகளும் அண்ணா சாலை, மேலூர் பிரதான சாலை, அழகர்கோவில் பிரதான சாலை, தேவர் சிலை என 4.6 கிலோ மீட்டர் தொலைவு ஓடி மீண்டும் மருத்துவக் க ல்லூரியை அடைந்தனர்.
மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் கே. வனிதா மற்றும் காவல் துணை ஆணையர் ஜெ. மகேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதில், அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் வி. தனலட்சுமி, அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் ஜெ. சங்குமணி, பேராசிரியர்கள் ஏ. ரத்தினவேல், எம். சிந்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com