பெரியாறு அணையிலிருந்து ஒரு போக சாகுபடி பகுதிக்குதண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட ஒருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை காலம் முடியும் முன்னர்

மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட ஒருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை காலம் முடியும் முன்னர் விவசாயத்துக்கு, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்ஆர்ப்பாட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு, வைகை அணைகளின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 2.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடைந்தன. இதில், கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் கள்ளந்திரி மதகுவரையில் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருபோக சாகுபடியும் நடைபெற்றன. அழகர்கோவில் மலைத் தொடர், சிறுமலை மலைத்தொடரிலிருந்து பருவமழை காலங்களில் பெருகிவரும் மழைநீரை ஆதாரமாகக் கொண்டு பாசன குளங்கள் மூலம் விவசாயம் நடைபெற்றது.
தென்மேற்குப் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பர் இறுதிவரை பெய்யும். கம்பம் முதல் கள்ளந்திரி மதகுவரை முதல்போகம் விளையும். 
அடுத்து வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் இறுதியில் முடியும். ஆறுமாத காலத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த விவசாய காலத்தில் 40 சதவிகிதம் அணைகளின் நீர் இருப்பும், 60 சதவிகிதம் சாகுபடிப்பகுதிகளில் பெய்யும் பருவமழை நீருமே நெல் சாகுபடிக்கு பெரிதும் உதவியது. 
ஆனால், பெரியாறு, வைகை அணைகளின் நீர் இருப்பு மட்டும் இந்த பகுதிகளின் விவசாயத்துக்கு போதுமானதல்ல.  தென்மேற்கு பருமழை காலம் முடிந்த பின்னர் தாமதமாக விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பதால் கதிர் பால்பிடிக்கும் தருணத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது. 
இதனால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில்  சில ஆண்டாக விவசாயம் நடைபெறவில்லை. எனவே,  பாரம்பரியமாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். 
எனவே, ஒருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பதை செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் அரசு அறிவிக்கவேண்டும். இல்லையெனில், தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செப்டம்பர் 25-இல் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சங்கத்தின்  தாலுகா செயலர் அடக்கிவீரணன்  தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com