இருதய நோய்களை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

நாட்டில் அதிகரித்து வரும் இருதய நோய்களை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என இருதய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் இருதய நோய்களை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என இருதய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் கணேசன்கூறியது: 
இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இருதய நோய் மற்றும் பக்கவாத நோய்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 1990-இல் 2.57 கோடி என்ற அளவில் இருந்த இருதய நாள நோய்கள், 2016-இல் 5.45 கோடியாக உயர்ந்திருக்கிறது.  இருதய நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர மக்களிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும் என்றார்.
  இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணன்:  மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ள நடுத்தர வயதினருக்கு இருதய நோய் பாதிப்பு அதிகம் உள்ளது.
 ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிந்து, அதற்கு உரிய சிசிச்சையளித்தால் உயிரிழப்பை குறைக்கலாம் என்றார்.
  இருதய சிகிச்சை நிபுணர் சம்பத்குமார்:  நாட்டில் இருதய நோய் அதிகரிப்பை குறைப்பதற்க அவசரகால நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமான ஒன்று என்றார்.
இருதய நோய் மயக்கவியல் நிபுணர் எஸ். குமார்:  உணவு கட்டுப்பாடு, உரிய உடற் பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பின்பற்றினால் இருதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.
  இருதய சிகிச்சை நிபுணர் ஜெயபாண்டியன்:  ஒருவருக்கு ஏற்படும் மாரைடப்பு அல்லது பக்கம்வாதம் என்பது, ரத்தநாள நோயின் முதல் எச்சரிக்கையாகும். மார்பின் மையப் பகுதியில் அல்லது கைகளில் வலி ஏற்படுவது, இடது தோள்பட்டையில், முழங்கை, தாடை அல்லது முதுகில் வலி ஏற்படுவது ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாகும் என்றார்.
இருதய சிகிச்சை நிபுணர் எஸ். செல்வமணி: புகையிலை பயன்பாட்டை நிறுத்துவது, உணவில் உப்பின்அளைவ குறைத்துக்கொள்வது, அதிக பழங்கள், காய்கறிகைள உட்கொள்வது, வழக்கமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஆபத்தான மதுபான பயன்பாட்டை தவிர்ப்பது போன்றைவ இருதய நோய் பாதிப்பை குறைப்பதற்கு உதவுகிறது. 
ரத்தநாள நோயினால் ஏற்படும் உயிரிழப்பு தடுப்பது குறித்து தேசிய அளவிலான சுகாதார அமைப்பு முறைகைள வலுப்படுத்துவதும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாக உள்ளது. மருத்துவ நிர்வாகி மருத்துவர் கண்ணன், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com