ரயில்வே பணிகளுக்கு கண்மாய்களில் மண் அள்ள தடைகோரி மனு: மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

மதுரை-வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணிகளுக்கு, கண்மாய்களில்

மதுரை-வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணிகளுக்கு, கண்மாய்களில் மண் அள்ளத் தடைகோரிய வழக்கில், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: மதுரை- வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் வழிப்பாதை அமைக்கும் பணிகள் ரூ.170 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணியை ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனம் செய்துவருகிறது. அந்நிறுவனம் ரயில்வே பணிகளுக்காக உரிய அனுமதியின்றி அருகே உள்ள கண்மாய்களில் மண் அள்ளுகிறது.
இதேபோல விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டகளிலும் ரயில்வே பணிகளுக்காக கண்மாயில்களில் அனுமதியின்றி மண் அள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சட்டவிரோதமாக கண்மாய்களில் மண் அள்ளுவதைத் தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com