Enable Javscript for better performance
"டெங்கு பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்குப் பின்  வீடு திரும்பினர்'- Dinamani

சுடச்சுட

    

    "டெங்கு பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்குப் பின்  வீடு திரும்பினர்'

    By DIN  |   Published on : 25th September 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 10 தினங்களில் 4 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக முதன்மையர் கே.வனிதா தெரிவித்தார்.
    மதுரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 10 தினங்களில், 4  பேர் "டெங்கு' பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
    இதுகுறித்து மருத்துவமனை முதன்மையர் கே.வனிதா செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நிலவி வருவதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் அனைவரும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர். 
    கடந்த 10 தினங்களில் காயச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 4 பேருக்கு "டெங்கு' பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் நலம் பெற்று வீடு திரும்பி விட்டனர். 
    "டெங்கு' பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தனி வார்டு மற்றும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. நோயாளிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai