Enable Javscript for better performance
திருமங்கலம் அருகே மகன் பைக் மோதி தாய் பலி- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம் அருகே  மகன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி பெண் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். 
     திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த ராஜாமணி மனைவி பவளமணி(46).  இவர் திருமங்கலத்தில் உள்ள தனது  உறவினர் வீட்டிற்கு மூத்தமகன் பவுன்ராஜின் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவர்களுடன் இளையமகன் விஜயகண்ணன் மற்றொரு வாகனத்தில் வந்துள்ளார். இரவு மூவரும் மீண்டும் மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். பவுன்ராஜ் வாகனத்தில் பவளமணி வந்தார். திருமங்கலம் மெட்டல் பவுடர் நிறுவனம் அருகே வந்தபோது பவுன்ராஜின் இருசக்கர வாகனத்தில் நாய் ஒன்று குறுக்கிட்டுள்ளது. இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைத் தடுமாறி பவளமணி தவறி கீழே விழுந்தார்.
     அதேசமயம் பின் தொடர்ந்து வந்த மற்றொரு மகன் விஜயகண்ணனின் இருசக்கர வாகனம் பவளமணி மீது மோதியது. இதில் விஜயகண்ணன் மற்றும் பவளமணி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்  இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பவளமணி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai