Enable Javscript for better performance
கிணற்றில் தவறி விழுந்த கிரேன் இயக்கும் தொழிலாளி பலி- Dinamani

சுடச்சுட

    

    கிணற்றில் தவறி விழுந்த கிரேன் இயக்கும் தொழிலாளி பலி

    By DIN  |   Published on : 29th September 2019 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    மதுரை அருகே வெள்ளிக்கிழமை கிரேன் கம்பி அறுந்து கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
    மதுரை மாவட்டம், அணைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கண்ணன் (40). இவர், வெள்ளிக்கிழமை கிரேன் இயந்திரம் மூலம் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கிரேன் கம்பி திடீரென அறுந்ததில், கண்ணன் கிணற்றுக்குள் விழுந்தார். இதில், அவருக்கு பலத்த காயமேற்பட்டது. 
    உடனே, அவருடன் பணியாற்றியவர்கள் அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு கண்ணனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
    இது குறித்து அய்யாவு அளித்த புகாரின்பேரில், சாப்டூர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (65). இவர், தையல் கடையில் வேலை செய்து வந்தார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேலைகளை முடித்துவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, கணேசன் தெற்கு மாசி வீதியில் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
    இது குறித்து அவரது மகன் கார்த்தீஸ்வரன் அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai