Enable Javscript for better performance
முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 1,827 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 1,827 பேர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 29th September 2019 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வரும் முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் சனிக்கிழமை 1,827 பேர் பங்கேற்றனர்.
    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களைப் பூர்த்தி செய்வதற்கான எழுத்துத் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இத்தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, 3 நாள்களுக்கு பாடவாரியாக இணைய வழியில் நடத்தப்படுகிறது.
    இதற்கென, மதுரை மாவட்டத்தில் 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை ஆங்கிலம் தேர்வு நடைபெற்றது. இத் தேர்வுக்கு 1,166 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 882 பேர் தேர்வெழுதினர். 284 பேர் தேர்வுக்கு வரவில்லை.
    அதேபோல், சனிக்கிழமை பிற்பகலில் வணிகவியல், வேதியியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த பாடங்களுக்கு மொத்தம் 1,166 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 945 பேர் தேர்வெழுதினர். 221 பேர் தேர்வுக்கு வரவில்லை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai