70  ஆண்டுகளுக்குப் பின் காஷ்மீர் பிரச்னைக்கு பாஜக தீர்வு கண்டுள்ளது: ஹச்.ராஜா

நேருவின் பிடிவாதத்தால் உருவான ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து பிரிவு பிரச்னைக்கு, 70 ஆண்டு காலத்துக்குப் பின்னர் பாஜகவால்


நேருவின் பிடிவாதத்தால் உருவான ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து பிரிவு பிரச்னைக்கு, 70 ஆண்டு காலத்துக்குப் பின்னர் பாஜகவால் தீர்வு காணப்பட்டுள்ளது என, அக்கட்சியின் தேசிய செயலர் ஹச். ராஜா தெரிவித்தார். 
மதுரை மாவட்டம், மேலூரில் தேச ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கம் சார்பில், ஒரு போக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவர் எம். முருகன் தலைமையில், ஜம்மு-காஷ்மீர் நேற்றும்-இன்றும் என்ற தலைப்பில் சனிக்கிழமை கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், ஹச். ராஜா சிறப்புரையாற்றியதாவது:
ஜம்மு-காஷ்மீர் பிரச்னை நேருவின் பிடிவாதம் காரணமாக உருவானது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங் காஷ்மீரத்தை இந்தியாவுடன் இணைத்து ஒப்பந்தம் செய்தார். அங்குள்ள மக்களும் அதைத்தான் விரும்பினர். இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர் உள்ளிட்டோரும் அதையே ஏற்றனர். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் 370-ஏ சிறப்புப் பிரிவு நேருவின் பிடிவாதத்தால் கொண்டுவரப்பட்டது. ஒரே நாடு இரு பிரதமர்கள், இரு தேசிய கொடிகள் என உருவானது.
ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியால் உருவான 70 ஆண்டு காலப் பிரச்னைக்கு பாஜகவால் தற்போது நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
இதில், அரிமா சங்கத் தலைவர் பி. கதிரேசன், பேராசிரியர் இரா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மருத்துவர் கணேசன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com