கிணற்றில் தவறி விழுந்த கிரேன் இயக்கும் தொழிலாளி பலி

மதுரை அருகே வெள்ளிக்கிழமை கிரேன் கம்பி அறுந்து கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.


மதுரை அருகே வெள்ளிக்கிழமை கிரேன் கம்பி அறுந்து கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், அணைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கண்ணன் (40). இவர், வெள்ளிக்கிழமை கிரேன் இயந்திரம் மூலம் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கிரேன் கம்பி திடீரென அறுந்ததில், கண்ணன் கிணற்றுக்குள் விழுந்தார். இதில், அவருக்கு பலத்த காயமேற்பட்டது. 
உடனே, அவருடன் பணியாற்றியவர்கள் அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு கண்ணனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து அய்யாவு அளித்த புகாரின்பேரில், சாப்டூர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (65). இவர், தையல் கடையில் வேலை செய்து வந்தார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேலைகளை முடித்துவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, கணேசன் தெற்கு மாசி வீதியில் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இது குறித்து அவரது மகன் கார்த்தீஸ்வரன் அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com