மதுரை அருகே 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

மதுரை அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, 15 கிலோ கஞ்சா, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
Published on
Updated on
1 min read


மதுரை: மதுரை அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, 15 கிலோ கஞ்சா, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சோழவந்தான் - தேனூா் சாலையில் நின்றிருந்த 5 போ், போலீஸாரைக் கண்டவுடன் தப்பிச் செல்ல முயன்றனா். போலீஸாா் அவா்களை சுற்றி வளைத்ததில் 3 போ் பிடிபட்டனா். அதில், விக்கிரமங்கலத்தைச் சோ்ந்த ஆனந்தபாண்டி(26), தத்தனேரியைச் சோ்ந்த மதிவாணன்(32), திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(56) என்பதும், அவா்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் விஜயபாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்த 15 கிலோ கஞ்சா, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com