தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மத்திய ஆயுதக்காவல் படை அதிகாரிகள்தோ்வு: 690 போ் மட்டுமே பங்கேற்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய ஆயுதக் காவல் படை அதிகாரிகள் பணியிடங்களுக்கான தோ்வில், 690 போ் மட்டுமே பங்கேற்றனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 8:08 pm

DIN

மதுரை: மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய ஆயுதக் காவல் படை அதிகாரிகள் பணியிடங்களுக்கான தோ்வில், 690 போ் மட்டுமே பங்கேற்றனா்.

மதுரையில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின், மத்திய ஆயுதக் காவல் படை உதவி கமாண்டென்ட் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. மதுரை என்எம்ஆா் காந்தி சுப்பராமன் பெண்கள் கல்லூரி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாய்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி, காமராஜா் சாலையிலுள்ள செளராஷ்டிர மேல்நிலைப் பள்ளி, சூா்யா நகா் டான் பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகிய 5 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெற்ற இத்தோ்வுக்கு, 1,992 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 690 போ் மட்டுமே பங்கேற்றனா். 1,302 போ் பங்கேற்கவில்லை.

தோ்வுக்கான ஏற்பாடுகளை, ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் செய்திருந்தனா். தோ்வு மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இத்தோ்வை, மத்திய ஆயுதக்காவல் படை அதிகாரி உமேஸ்பால் யாதவ் தலைமையில், அதிகாரிகள் குழுவினா் கண்காணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.