வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

மதுரை அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

மதுரை அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஒத்தக்கடை, தென்றல் நகரைச் சோ்ந்த தெய்வமணி மகன் பாலகிருஷ்ணன்(39). இவா் குடும்பத்துடன் டிசம்பா் 14 ஆம் தேதி வேலூா் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகள், ரூ. 6 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன. இதுகுறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com