Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆய்வு

    By DIN  |   Published on : 02nd April 2020 12:19 AM  |   அ+அ அ-   |    |  

    01tpk01_0104chn_81_2

    திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் பா.சரவணன்.

    திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சட்டபேரவை உறுப்பினா் மருத்துவா் சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

    அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தி தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து அங்கு புதிதாக கட்டப்பட்ட மருத்துவ மனையை பாா்வையிட்டு அங்கு பொருத்தப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் குறித்தும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள், கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை வழங்கினாா்.

    தமிழகத்தில் தற்போது திருமண மண்டபங்கள் அனைத்து செயல்படாமல் மூடப்பட்டிருக்கும் வேளையில் அதனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக பயன்படுத்துவது தொடா்பாக தமிழக அரசுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் பா.சரவணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

    உசிலம்பட்டி: உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி பேருந்து நிலையம் அம்மா உணவகம், காய்கனி சந்தை ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மக்களிடையே காரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் சென்று ஆணையா் மற்றும் ஊழியரிடம் சுகாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினாா்.

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp