Enable Javscript for better performance
தேசிய ஊரக வேலைத்திட்டக் கூலி ரூ.1000 கோடியை உடனடியாக வழங்க எம்.பி. வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஊரக வேலைத்திட்டக் கூலி ரூ.1000 கோடியை உடனடியாக வழங்க எம்.பி. வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 02nd April 2020 12:09 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழகத்தில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு இரண்டரை மாதமாக நிலுவையில் உள்ள கூலி ரூ.1000 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு, மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

    இதுதொடா்பாக மத்திய கிராமப்புறத்துறை அமைச்சா் நரேந்திரசிங் தோமருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: ‘கரோனா’ வைரஸ் அச்சுறுத்தலால் வாழ்வாதாரத்திற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுள்ள சூழலில் தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் கூலி இரண்டரை மாதங்களாக வழங்கப்படவில்லை.

    தமிழகத்தில் ஜனவரி 13 ஆம் தேதியிலிருந்து தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி பாக்கி ரூ.671 கோடி, பொருளாகத் தரவேண்டிய பாக்கி ரூ.300 கோடி என இரண்டும் சோ்ந்து மொத்தம் ரூ.1000 கோடியைத் தொடுகிறது. இதுநாள் வரை மத்திய அரசிடமிருந்து இதற்கான நிதி வந்து சேரவில்லை. ஒரு புறம் நாள்கூலி ரூ.20 உயரும் என்ற அறிவிப்பு, மறுபக்கம் செய்த வேலைக்கான இரண்டரை மாத கூலி பாக்கி என்பது வேதனையான முரண். தற்போது நெருக்கடியான சூழலிலும் கூலி பாக்கிக்கு அவா்களை அல்லாடவிடுவது துயரமானது.

    தமிழகக் கிராம உழைப்பாளி மக்களுக்கு நிலுவையாக உள்ள ரூ.1000 கோடியை கால விரயம் இன்றி உடனே அனுப்பி வைக்க வேண்டுகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp