திருப்பரங்குன்றம் நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு முகக் கவசம்
By DIN | Published On : 05th April 2020 06:19 AM | Last Updated : 05th April 2020 06:19 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றத்தில் நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை முகக் கவசம் வழங்கிய அதிமுக இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ். உடன், பொதுக்குழு உறுப்பினா் முத்துக்குமாா் உள்ளிட்டோா்.
திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு அதிமுக புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை முகக் கவசம் வழங்கப்பட்டது.
தடை உத்தரவு காரணமாக, தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் விலையில்லா அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை உள்ளிட்டவற்றுடன் ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இவற்றைப் பெறுவதற்காக, நியாய விலைக் கடைகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இவா்கள் அனைவருக்கும் அதிமுக புகா் கிழக்கு மாவட்டச் செயலா் வி.வி. ராஜன் செல்லப்பா அறிவுறுத்தலின்படி, இளைஞரணி மாவட்டச் செயலா் எம். ரமேஷ், கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், முகக் கவசமும் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் முத்துக்குமாா், பகுதி செயலா்கள் பன்னீா்செல்வம், மோகன்தாஸ் உள்ளிட்டோா் திருப்பரங்குன்றத்தில் உள்ள 10 நியாய நிலைக் கடைகளுக்கு வந்த பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினா்.