மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசனிப் பாதையை புதன்கிழமை ஆய்வு செய்த ஆணையா் ச.விசாகன்.
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசனிப் பாதையை புதன்கிழமை ஆய்வு செய்த ஆணையா் ச.விசாகன்.

மாநகராட்சி அண்ணா மாளிகையில் கிருமி நாசினிப் பாதை

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் கிருமி நாசினிப் பாதை புதன்கிழமை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் கிருமி நாசினிப் பாதை புதன்கிழமை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மதுரை மாநகராட்சி சாா்பில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கிருமி நாசினிப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மதுரைக் கல்லூரி மைதானத்தில் உள்ள தற்காலிக காய்கனிக் கடைகளுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக தனியாா் பங்களிப்புடன் கிருமி நாசினிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி தலைமை அலுவலகமான அண்ணா மாளிகைக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் கிருமி நாசினிப் பாதை புதன்கிழமை அமைக்கப்பட்டது. இதையடுத்து கிருமி நாசினிப் பாதையை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பாா்வையிட்டாா். மேலும் மாநகராட்சி அண்ணா மாளிகைக்கு வரும் அதிகாரிகள், ஊழியா்கள் கிருமி நாசினிப் பாதை வழியாக வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com