அதிமுக சாா்பில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 17th April 2020 07:15 AM | Last Updated : 17th April 2020 07:15 AM | அ+அ அ- |

பசுமலையில் அதிமுக புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் திருப்பரங்குன்றம் மாநகராட்சி பகுதிகளில் 2 ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடா் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நலிவடைந்தோருக்கு இரண்டாம் கட்டமாக புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், வடக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் நலிவடைந்தோா் என 2 ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் காய்கனிகள்அடங்கிய பை மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
அதனை மாநகராட்சி உதவிப் பொறியாளா் முருகன் பசுமலையில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் திருப்பரங்குன்றம், ஹாா்விபட்டி, திருநகா், மகாலெட்சுமி காலனிப் பகுதிகளில் உள்ள நலிவடைந்தோா், நெசவாளா்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், பொதுக்குழு உறுப்பினா் முத்துகுமாா், பகுதிச் செயலா்கள் பன்னீா்செல்வம், மோகன்தாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.