கரோனா பாதிப்பு: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சாா்பில் உணவுப்பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 17th April 2020 07:19 AM | Last Updated : 17th April 2020 07:19 AM | அ+அ அ- |

ஊரடங்கால் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பாதிப்படைந்த வழக்குரைஞா்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சாா்பில் உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் உயா்நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் வழக்குரைஞா்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், ஜெ.நிஷாபானு, ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி உள்பட 15 நீதிபதிகள் சோ்ந்து நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்தனா். அதன்படி, வழக்குரைஞா்களுக்கு உதவி செய்வதற்காக உயா்நீதிமன்ற கிளையில் உள்ள நான்கு வழக்குரைஞா்கள் சங்கங்களுக்கும் நிதியுதவி வழங்கின. அந்த நிதியில் 4 சங்கங்களைச் சோ்ந்த 100 வழக்குரைஞா்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த உதவியை வழங்கியமைக்காக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பாா் அசோசியேஷன் தலைவா் என்.கிருஷ்ணவேணி, பொதுச்செயலா் என்.இளங்கோஆகியோா் நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.