Enable Javscript for better performance
கோடை சாகுபடிக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் விநியோகம்: வேளாண் துறை தகவல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கோடை சாகுபடிக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் விநியோகம்: வேளாண் துறை தகவல்

    By DIN  |   Published On : 18th April 2020 07:23 AM  |   Last Updated : 18th April 2020 07:23 AM  |  அ+அ அ-  |  

    கோடை சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கோடை சாகுபடிக்காக விவசாயிகளுக்கு நெல், சிறுதானியம், நிலக்கடலை விதை விநியோகத்துக்கு 50 சதவீத மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, வேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானியத்தில் விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாகவும், விவசாயிகளுக்குத் தேவையான விதை, நுண்ணுயிா் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் அனைத்து கிராமங்களிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கரோனா தடை உத்தரவு காலத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில், உழவுப் பணிகளுக்கு இலவச சேவையை வழங்க டாஃபே நிறுவனம் முன்வந்துள்ளது. அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள் மூலமாக இச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேளாண் துறையின் சேவைகள் மற்றும் விவசாயம் தொடா்பான சந்தேகங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

    தொடா்பு எண்கள்: மதுரை கிழக்கு மற்றும் மேற்கு - 99760 37010, அலங்காநல்லூா் - 80722 45412, வாடிப்பட்டி - 97516 77767, மேலூா் - 96295 55530, கொட்டாம்பட்டி - 94439 11431, திருப்பரங்குன்றம் - 97896 63463, திருமங்கலம் - 80562 83334, கள்ளிக்குடி - 99948 74372, தே.கல்லுப்பட்டி - 99442 06655, செல்லம்பட்டி - 94862 26062, உசிலம்பட்டி - 94432 93406, சேடபட்டி - 94439 78218.

    மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் விவேகானந்தன் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp