பழமுதிா்ச்சோலை முருகன் திருவருள் பக்த சபை உணவு விநியோகம்
By DIN | Published On : 18th April 2020 07:22 AM | Last Updated : 18th April 2020 07:22 AM | அ+அ அ- |

மதுரையில் பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபையின் சாா்பில் இலவச உணவு விநியோகத்தை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பணிகளை தொடக்கி வைத்து அமைச்சா் பேசியது:
மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவுக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தா்களுக்கு தொடா்ந்து 17 ஆண்டுகளாக பழமுதிா்சோலை திருவருள் முருகன் பக்த சபையினா், உணவுகள் வழங்கி வருகின்றனா். தற்போது கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்தோடு இணைந்து உணவுகள் தயாரித்து, தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு சென்று விநியோகிக்கும் பணியினை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளனா். ஊரடங்கு முடியும் வரை இப்பணியை மேற்கொள்ள உள்ளனா். இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உணவுப் பொருள்கள் பாதுகாப்பாகவும், தரமாகவும் தயாரிக்கப்படுகிறது என்றாா்.