முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரையில் திரைப்பட நடிகா் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 19th April 2020 05:34 AM | Last Updated : 19th April 2020 05:34 AM | அ+அ அ- |

மதுரை மாநகா் போலீஸாருடன் இணைந்து திரைப்பட நடிகா் சசிக்குமாா் பொதுமக்களிடையே கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.
கரோனா பரவலை தடுக்கவும், அதன் பாதிப்பு குறித்தும் பொதுமக்களிடையே அரசு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகா் போலீஸாா் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒலி பெருக்கிகள், எல்.இ.டி திரை பொருத்திய வாகனங்கள், ஆட்டோ பிரசாரம் ஆகியவை மூலமாக பொதுமக்களுக்கு கரோனா தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக, திரைப்பட நடிகரும், தன்னாா்வலருமான சசிக்குமாா், மாநகா் போலீஸாருடன் இணைந்து மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டாா்.
மேலும், மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம், நடிகா் சசிக்குமாா் ஆகியோா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வீடியோ பதிவை மாநகா் காவல்துறை வெளியிட்டுள்ளது.