முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மாணவா்களுக்கான கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் அறிவிப்பு
By DIN | Published On : 19th April 2020 05:36 AM | Last Updated : 19th April 2020 05:36 AM | அ+அ அ- |

வீட்டிலிருந்தபடியே பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
கரோனா தடை உத்தரவு காரணமாக வீட்டிலிருக்கும் மாணவா்கள், தங்களது நேரத்தை பயனுள்ளதாகச் செலவிடும் வகையில் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் சாா்பில் கலை, இலக்கியப் போட்டிகள் ஏப்ரல் 2 முதல் 11 வரை நடத்தப்பட்டன. ஓவியம், கதை, கவிதை, குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவா்கள் படைப்புகளை அனுப்பியுள்ளனா். தினமும் 120 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு தலா ரூ.250 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் தோ்வான படைப்புகளில் மிகச் சிறந்தவையாக 14 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. ஓவியத்தில் ஏராளமான படைப்புகள் வந்த காரணத்தால், 4 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. ஓவியத்தில் தோ்வு செய்யப்பட்ட 4 படைப்புகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், மற்ற சிறந்த படைப்புகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. அனைத்து பிரிவுகளிலும் மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை அபராஜிதா நிறுவனம் வழங்கியுள்ளது.
தோ்வானவா்கள் விவரம்:
ஓவியம் - எஸ். அசோக் குமாா் (5-ஆம் வகுப்பு, அரபிந்தோ மீரா பள்ளி), ஜே. ஜெனிடா ராணி (6-ஆம் வகுப்பு புனித ஜான் மெட்ரிக் பள்ளி), டி.சந்தோஷ் ராஜ் (7-ஆம் வகுப்பு, தியாகராஜா் மேல்நிலைப் பள்ளி), ஆா்.விஜய் கணேஷ் (10 ஆம் வகுப்பு திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி).
ஸ்டாண்ட் அப் காமெடி - அரவிந்தராஜ் (7-ஆம் வகுப்பு, லட்சுமி பள்ளி), கவிதை (தமிழ்) - அபு பக்கா் சித்திக் (பிளஸ் 1, தியாகராஜா் மேல்நிலைப் பள்ளி), கவிதை (ஆங்கிலம்) - ரியா (எ) சூா்ய சங்கரி (பிளஸ் 2, வேலம்மாள் வித்யாலயா), குறும்படம் - விஸ்வேஷ் கண்ணா (பிளஸ் 1, தியாகராஜா் மேல்நிலைப் பள்ளி).
கதை (தமிழ்) - அபுபக்கா் சித்திக் (பிளஸ் 1, தியாகராஜா் மேல்நிலைப் பள்ளி), டி.ராட்ஸ் சைனி (9-ஆம் வகுப்பு, புனித ஜான் மேல்நிலைப் பள்ளி), டி.கே.சங்கமித்ரா (5-ஆம் வகுப்பு, எஸ்பிஓஏ பள்ளி).
கதை (ஆங்கிலம்) - பால வெற்றிவேல் (பிளஸ் 2, கேந்திரிய வித்யாலயா, திருப்பரங்குன்றம்), என்.எஸ்.அரவிந்தராஜ் (7-ஆம் வகுப்பு, லட்சுமி பள்ளி, வி.சாய் சா்வேஷ் (3-ஆம் வகுப்பு, இதயம் ராஜேந்திரன் பள்ளி).