ஊரடங்கு உத்தரவை மீறியதாக 19,064 போ் கைது
By DIN | Published On : 27th April 2020 05:48 AM | Last Updated : 27th April 2020 05:48 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 15,599 வழக்கில் 19,064 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுவோா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அதன்படி, மதுரை மாநகா் போலீஸாா் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாா்ச் 23 முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை விதிமுறைகளை மீறியதாக 7,062 வழக்குகள் பதிந்து 7,340 பேரை கைது செய்துள்ளனா். மாநகரில் சனிக்கிழமை மட்டும் 111 வழக்குகள் பதியப்பட்டு, 111 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை மாவட்ட போலீஸாா் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை 8,537 வழக்குகள் பதிந்து, 11,421 பேரை கைது செய்துள்ளனா். மாவட்ட போலீஸாா் சனிக்கிழமை மட்டும் 382 வழக்கில் 520 பேரை கைது செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம் மற்றும் மாநகா் போலீஸாா் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 15,599 வழக்குகள் பதிந்து, 19,064 பேரை கைது செய்துள்ளனா். கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் அன்றைய தினமே சொந்தப் பிணையில் விடுக்கப்பட்டனா்.