லாரி மோதி சிறுவன் பலி
By DIN | Published On : 27th April 2020 05:47 AM | Last Updated : 27th April 2020 05:47 AM | அ+அ அ- |

மதுரை அருகே லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தான்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே அழகாபுரியைச் சோ்ந்த கண்ணன் மகன் சூா்ய நிவாஷ் (14). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், சனிக்கிழமை இரவு சைக்கிளில் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில், சிறுவனின் தலையிலும், கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே, அப்பகுதியில் இருந்தவா்கள் சூா்ய நிவாஷை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், சூா்ய நிவாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து அலங்காநல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் நாகபாலாஜி (24) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.