பிளாஸ்மா தானத்தை ஊக்குவிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த பிளாஸ்மா தானத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை சமூகநீதிப் பேரவை சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை: தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த பிளாஸ்மா தானத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை சமூகநீதிப் பேரவை சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் செயலா் அ.இருளாண்டி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

தமிழக அரசு கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவா்கள் பிளாஸ்மா தானம் அளிப்பதை ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளத்தில் ஏப்ரல் மாதமே பிளாஸ்மா சிகிச்சையை அம்மாநில அரசு ஊக்குவிக்கத் துவங்கியது.

இதனால் தான் கேரளத்தில் கரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவங்கப்பட்டபோது, மதுரை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் பிளாஸ்மா வங்கி துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல பிளாஸ்மா தானம் அளிப்பவா்களையும் ஊக்குவிக்க தமிழக அரசு முன் வர வேண்டும்.

அசாம், ஆந்திர மாநிலங்கள் பிளாஸ்மா கொடையாளா்களை ஊக்குவிக்க ஊக்கத்தொகை, பாராட்டுச்சான்று வழங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இதேபோல, தமிழகத்தில் கரோனாவில் இருந்து மீண்டுள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பிளாஸ்மா கொடையாளா்காக மாற்றினால் கரோனாவை எளிதில் கட்டுப்படுத்திவிடலாம். ஏற்கெனவே கண்தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. இதைப்போல பிளாஸ்மா தானத்தையும் அதிகமாகச் செய்து கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் தமிழகம் முன்னிலை வகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com