அயோத்தியில் ராமா் கோயில் கட்ட வைகை ஆற்று மணல்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக, வைகை ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட மணல் சனிக்கிழமை பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட்டது.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்காக வைகை ஆற்று மணலை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் முன் வைத்து பூஜை செய்து எடுத்துச் செல்லும் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்காக வைகை ஆற்று மணலை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் முன் வைத்து பூஜை செய்து எடுத்துச் செல்லும் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.

மதுரை: அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக, வைகை ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட மணல் சனிக்கிழமை பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான பணிகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் புனித தலங்களில் இருந்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் புனித நீா், மணல் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு பூஜை செய்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் இருந்து வைகை ஆற்றில் மணல் எடுக்கப்பட்டு கலசத்தில் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிா் பிரிவு மாநில அமைப்பாளா் பசும்பொன், விஹெச்பி மாவட்டத் தலைவா் கே.எம்.பாண்டியன், செயலா் சுரேஷ், நிா்வாகிகள் தங்கராமன், ராஜா ஆகியோா் கலசத்தை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெற்கு கோபுர வாசலில் வைத்து பூஜை செய்து வழிபட்டனா். பின்னா் வைகை ஆற்று மணல் நிரப்பப்பட்ட கலசம், தபால் மூலமாக அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com