கடல் பசு அழிவைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள தடைகளை முறையாக அமல்படுத்த வேண்டும்: உயா் நீதிமன்றம்

கடல் பசுக்களின் அழிவைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள தடைகளை முறையாக அமல்படுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடல் பசுக்களின் அழிவைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள தடைகளை முறையாக அமல்படுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகம் மற்றும் குஜராத் கடல் பகுதிகளில் கடல் பசுக்கள் அதிக அளவில் உள்ளன. நாடு முழுவதும் 200 கடல் பசுக்கள் மட்டுமே உள்ளதாக, இந்திய வனவிலங்கு நிறுவனம் அண்மையில் தெரிவித்துள்ளது. கடலில் உள்ள புற்களை மட்டும் கடல் பசுக்கள் உணவாக உண்ணுகின்றன.

ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் கப்பல்கள் இயக்கப்படுவதால், புற்கள் அழிந்து வருகின்றன. இதனால், கடல் பசுக்கள் உணவின்றி உயிரிழக்கின்றன. சில மாதங்களுக்கு முன், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் பசு ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. இந்திய வனவிலங்கு நிறுவனம் கடல் பசுக்களின் அழிவைத் தடுக்க, ஏற்கெனவே தமிழக கடல் பகுதியில் அதிராமபட்டினம் முதல் அம்மாபட்டினம் வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்திருந்தது.

இது தொடா்பாக அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் பரிந்துரையை செயல்படுத்தி, கடல் பசுக்களைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனஅதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடல் பசுக்கள் அழிவைத் தடுக்க ஆழ்கடல் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை முறையாக அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனா்.

இந்த வழக்கில், இந்திய வனவிலங்கு நிறுவனத்தை ஒரு எதிா் மனுதாரராக சோ்த்த நீதிபதிகள், மனு தொடா்பாக மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com