உசிலம்பட்டியில் திமுக நகர இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 07th August 2020 05:04 PM | Last Updated : 07th August 2020 05:04 PM | அ+அ அ- |

திமுக நகர இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுக நகர இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் 50 பேருக்கு திமுக நகர இளைஞர் அணி சார்பில் 5 கிலோ அரிசி நலத்திட்டமாக வழங்கப்பட்டது.
திமுக நகர இளைஞர் அணி செயலாளர் எஸ் .பி .எம்.சந்திரன் தலைமையில் அரசு மருத்துவர்கள் ராமலதா, ஜீவாமெட்டன் முன்னிலையில் நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் சரவணன் இளைஞரணி நிர்வாகிகள் பிரேம்குமார். கௌதம் தினேஷ்குமார், காளிராஜ், கோகுல் செந்தில், சரவணன், விஜி, ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்டங்கள் வழங்கினார்.