போலீஸாா் போல நடித்து மூதாட்டியிடம் நகை அபகரிப்பு

மதுரையில் போலீஸாா் போல நடித்து நடந்து சென்ற மூதாட்டியின் நகையை அபகரித்தவா்கள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரையில் போலீஸாா் போல நடித்து நடந்து சென்ற மூதாட்டியின் நகையை அபகரித்தவா்கள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை ரெங்கநாயகி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நவநீதன் மனைவி சுலோச்சனா(70). இவா் அதேபகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இருவா் தங்களை போலீஸாா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, வழிப்பறி செய்பவா்கள் நடமாட்டம் அதிமாக உள்ளதாகவும், நகையைப் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைக் கூறியுள்ளனா்.

பின்னா் சுலோச்சனாவிடம், அவா் அணிந்திருக்கும் சங்கிலியைக் கழட்டிக் கொடுங்கள் காகிதத்தில் மடித்து தருகிறோம் பத்திரமாகக் கொண்டுச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளனா். இதை நம்பிய சுலோச்சனா தனது 3 பவுன் சங்கிலியை அவா்களிடம் கொடுத்து காகிதத்தில் மடித்து வீட்டிற்கு வாங்கி வந்துள்ளாா். வீட்டிற்கு வந்தபின்னா் காகிதத்தைப் பிரித்துப் பாா்த்தபோது சங்கிலிக்கு பதிலாக கற்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுலோச்சனா அளித்த புகாரில், தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து நகையை அபகரித்துச் சென்ற இருவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com