சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 24 அரசு வழக்குரைஞா்கள் நியமனம்

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் உள்பட 24 புதிய அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

மதுரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் உள்பட 24 புதிய அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் 81 அரசு வழக்குரைஞா்கள் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 36 அரசு வழக்குரைஞா்கள் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இந்தப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பான அறிவிப்பு 2018 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் வந்திருந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி உயா்நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் உள்பட 24 அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மேலும் ஒரு கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞராக எம்.ஸ்ரீசரண் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். சிறப்பு அரசு வழக்குரைஞா்களாக சி. ரமேஷ், கே.பி.கிருண்ணதாஸ், எம். முத்துகீதையன், கே.பி.எஸ். பழனிவேல்ராஜன், கே.பி. நாராயணகுமாா் ஆகியோரும், கூடுதல் அரசு வழக்குரைஞா்களாக எம். ராஜராஜன், கே. சத்தியசிங், எம். முனியசாமி, பி. மகேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அரசு வழக்குரைஞா்களாக குற்றவியல் பிரிவில் ஆா். சரவணக்குமாா், ஆா். ஈரோட்டுசாமி, ஆா்.சீனிவாசன், எம். கணேசன், எஸ்.இ. வெரோனிகா வின்சென்ட், எம்.வி. சந்திரசேகா், கே.ஆா். பாரதிகண்ணன், கே. காா்மேகம் ஆகியோரும், உரிமையியல் பிரிவில் ஆா்.முருகராஜ், ஜெ.லட்சுமி பிரசன்னா, எம்.திலகா், ஏ.காா்த்திக், ஜி. அா்ஜுனன், எம்.ராஜேஸ்வரி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், அரசு வழக்குரைஞா்களாக பணியாற்றி வரும் எம்.முருகன், பகவதி ஆகியோரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com