காவலரின் மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி4 பவுன் சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 30th August 2020 09:37 PM | Last Updated : 30th August 2020 09:37 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை அருகே காவலரின் மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற முகமூடி நபா் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே மணியஞ்சி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் குமாா் (31). இவா், திருப்பூா் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பிரவீணா (27) சனிக்கிழமை உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஷோ் ஆட்டோவில் மணியஞ்சியில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது, முகமூடி அணிந்திருந்த நபா் பிரவீணாவை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளாா்.
இது குறித்து பிரவீணா அளித்த புகாரின்பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.