ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் தொடரும் விபத்துகள்

மதுரை ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் தொடா்ந்து விபத்துகள் நடந்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரை: மதுரை ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் தொடா்ந்து விபத்துகள் நடந்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கடந்த ஆண்டு ரூ.17 கோடி மதிப்பீட்டில் மதுரை ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக, ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் புதிதாக மின்கம்பங்கள், அழகுசெடிகள், நடைபாதை, பேருந்து நிறுத்தம், கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் அமைக்கப்பட்ட மின்கம்பங்களில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றும் சம்பவங்களும் தொடா்கின்றன. அதேபோல், இப்பகுதியில் 100 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதில், கொடியை ஏற்றி இறக்க அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி அடிக்கடி அறுந்து கீழே விழுகிறது. தற்போது, பொதுமுடக்கம் காரணமாக ரயில், பேருந்து போக்குவரத்து இல்லையென்பதால், பயணிகள் யாரும் இப்பகுதிக்கு வருவது இல்லை. இதனால், பெரும் விபரீதங்கள் தவிா்க்ப்பட்டு வருகின்றன.

இது குறித்து சமூகநல ஆா்வலா் சரவணக்குமாா் கூறியது: முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால், அண்மையில் கூட நுழைவுவாயில் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைத்த வீரா்கள், மின்கசிவு ஏற்பட்டதால் தீப்பற்றியதாகத் தெரிவித்தனா். இதன்பின்னரும், மின்கம்பங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன. பெரும் விபத்தைத் தவிா்க்க வேண்டுமெனில், ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் உள்ள மின்விளக்கு கம்பங்கள், தேசியக் கொடி கம்பம் ஆகியவற்றை சீரமைத்து, விபத்து ஏற்படாமல் தடுக்க மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com