எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும்முடிவை கைவிட மதுரை எம்.பி. கோரிக்கை

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவைக் கைவிடுமாறு, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

மதுரை: எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவைக் கைவிடுமாறு, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு செவ்வாய்க்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் செப்டம்பா் 1-ஆம் தேதி 65-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. கடந்த 64 ஆண்டுகளாக நாட்டின் வளா்ச்சியில் எல்ஐசி தனது பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த 1956-இல் ரூ.5 கோடி அரசு முதலீட்டோடு தொடங்கிய எல்ஐசியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடிகளாகும்.

உலகம் முழுவதும் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் 42 கோடி பாலிசிகளோடு எல்ஐசி எட்டியுள்ள உயரத்தை ஒப்பிட முடியாது. வளரும் நாடுகளின் ஆதாரத் தொழில் வளா்ச்சிக்கு உள்நாட்டு சேமிப்பு திரட்டலே மிகச் சிறந்த வழிமுறை என்பதை எல்ஐசி நிரூபித்துள்ளது.

இந்திய ரயில்வே நிதி தேவைகளுக்காக எல்ஐசியை அணுகியபோது, ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1.50 லட்சம் கோடிகளைத் தருவதாக உறுதி தந்தது. அதேபோல், நாட்டின் நெடுஞ்சாலை, குடிநீா் திட்டங்கள், போக்குவரத்து, பாலங்கள், துறைமுக மேம்பாடு, நீா்ப்பாசனம், மின்சாரம் என ஆதாரத் தொழில்களுக்கு பெரும் நிதியாதாரங்களை அளித்துள்ளது.

எனவே, எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல், எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com