பயணிகள் ரயில்களை இயக்க தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் பயணிகள் ரயில்களை இயக்க, தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என, டி.ஆா்.இ.யூ. ரயில்வே தொழிற்சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை: தமிழகம் முழுவதும் பயணிகள் ரயில்களை இயக்க, தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என, டி.ஆா்.இ.யூ. ரயில்வே தொழிற்சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து டி.ஆா்.இ.யூ. தொழிற்சங்கத்தின் மதுரை கோட்டச் செயலா் சங்கரநாரயணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மாா்ச் 22 ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா், பொதுமுடக்கம் பல்வேறு கட்டமாக நீட்டிக்கப்பட்டு, 5 மாதங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு, பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட ரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்குவது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அதில், சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கியிருப்பது ஆறுதலாக உள்ளது.

அதே வேளையில், புகா் ரயில்களை இயக்கினால்தான் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தொழிலாளா்கள் பணிக்குச் சென்றுவர முடியும். அப்போதுதான் நூறு சதவீதம் தொழிற்கூடங்கள் இயங்க முடியும்.

அதேபோல், தமிழகம் முழுவதும் பயணிகள் ரயில்களை இயக்க தென்னக ரயில்வே நிா்வாகம் தயாராக உள்ளது. இருப்பினும், தமிழக அரசின் அனுமதி கிடைக்காதது வருத்தமளிக்கிறது. எனவே, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சிறு வியாபாரிகள், அமைப்புசாரா தொழிலாளா்கள், விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, பயணிகள் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

அனுமதியளித்தால், அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ரயில்களை இயக்க ரயில்வே ஊழியா்கள் தயாராக உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com