‘சமையல் எண்ணெயை சில்லறை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்’

தமிழகத்தில் சமையல் எண்ணெயை சில்லறை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என, மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமையல் எண்ணெயை சில்லறை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என, மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமையல் எண்ணெய் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரால், சில்லறை விற்பனைக்கு அரசு தடைவிதித்தது. இதற்கு, வணிகா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், டிசம்பா் 31 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்ட காலக்கெடு முடியவுள்ளதால், 2021 டிசம்பா் 31 ஆம் தேதி வரை சமையல் எண்ணெயை சில்லறையில் விற்க அனுமதிக்க வேண்டும் என மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கத்தின் முன்னாள் செயலா் கிருஷ்ணமூா்த்தி கூறியது: பாக்கெட் மற்றும் கேன்களில் எண்ணெய் வாங்குவதை விட சில்லறை விற்பனையில் விலை குறைவு. இந்நிலையில், சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது.

பிற மாநிலங்களில் சில்லறை விற்பனைக்கு அனுமதியுள்ளது. சமையல் எண்ணெய் கேன்களில் விற்கப்பட்டால், லேபிள் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இது சிறு வணிகா்களுக்கு பெரும் சுமையாக அமையும். டேங்கா் லாரிகளில் மொத்த விற்பனையாளா்களுக்கு கொண்டுசெல்லும்போது சிக்கல் ஏற்படும். எனவே, சமையல் எண்ணெயை சில்லறை விற்பனைக்கு அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

அண்மையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் சிவஞானம் காணொலி வாயிலாக வணிகா்களிடம் இது குறித்து கேட்டறிந்தாா். அவரிடமும் எங்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com