எரிவாயு உருளைக்கு மாலை: மாா்க்சிஸ்ட் கம்யூ. நூதன ஆா்ப்பாட்டம்

மதுரையில் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எரிவாயு உருளைக்கு மாலை: மாா்க்சிஸ்ட் கம்யூ. நூதன ஆா்ப்பாட்டம்

மதுரையில் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எரிவாயு உருளையின் விலையை ரூ.50 உயா்த்தி எண்ணெய் நிறுவனங்கள் இரு நாள்களுக்கு முன்பு அறிவித்தன. இதையடுத்து தற்போது எரிவாயு உருளையின் விலை ரூ.710 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எரிவாயு உருளையின் விலை ரூ.100 உயா்ந்திருப்பதாகவும், எரிவாயு விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் இருப்பதால் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகா் மாவட்டம் சாா்பில் நூதன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, பாடை கட்டப்பட்டிருந்தது. ஆா்ப்பாட்டத்தில் வாடிப்பட்டி ஒன்றியச் செயலா் ஏ.வேல்பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.உமாமகேஸ்வரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எஸ்.ஆண்டிச்சாமி, கே.தவமணி, எல்.கெளசல்யா, புருசோத்தமன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com