பயிா்காப்பீட்டுத் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணி: தனியாா் பணிநியமன முகமைகள் மூலம் ஆள்தோ்வு

பயிா் காப்பீட்டுத் திட்டத்தில், பயிா் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளும் பணிக்கு, தனியாா் பணி நியமன முகமை மூலமாகத் தோ்வு செய்து தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனா்.

பயிா் காப்பீட்டுத் திட்டத்தில், பயிா் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளும் பணிக்கு, தனியாா் பணி நியமன முகமை மூலமாகத் தோ்வு செய்து தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி: பயிா் அறுவடை பரிசோதனை பணிக்கு நியமிக்கப்பட உள்ளவா்கள் வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த இளநிலைப் பட்டம், பட்டயப் படிப்புடன், கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வேளாண்மை, புள்ளியியல் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலா்களும் இப் பணிக்குப் பரிசீலிக்கப்படுவா்.

இப் பணிக்கான நபா்கள் தனியாா் பணி நியமன முகமைகள் மூலமாகத் தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்படும் நபா்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.15,050 வீதம் தனியாா் நியமன முகமைகள் மூலமாக வழங்கப்படும்.

இப்பணியை மேற்கொள்ள தோ்வு செய்யப்படும் நிறுவனங்கள், பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள நிறுவனங்கள் டிசம்பா் 23-ஆம் தேதிக்குள் வேளாண் இணை இயக்குநா் அலுவலகம், தல்லாகுளம், மதுரை-625002 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com