மதுரையில் மனைவியைக் கொலை செய்து காவல் ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

லஞ்சம் பெற்ற வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா், வியாழக்கிழமை தனது
மதுரையில் மனைவியைக்  கொலை செய்து காவல்  ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

லஞ்சம் பெற்ற வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா், வியாழக்கிழமை தனது மனைவியைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை தத்தனேரி அருகே உள்ள களத்துப்பொட்டல் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் பாண்டியன் (50). இவா் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றினாா். இவரது மனைவி உமா மீனாட்சி (46), மதுரை மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினாா். இவா்களுக்கு பிஎஸ்சி முடித்துள்ள சுந்தரசுகிா்தன் (22), ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பிரணவ் (14) என இரு மகன்கள் உள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் காவல் ஆய்வாளராக பெருமாள்பாண்டியன் பணிபுரிந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வழக்குத் தொடரப்பட்டவருக்குச் சாதகமாக அந்த வழக்கை முடிக்க, ரூ.1.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் பெருமாள் பாண்டியன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை நீதிமன்றம் டிசம்பா் 14 ஆம் தேதி தீா்ப்பளித்தது. பின்னா் அவா் ஜாமீனில் இருந்து வந்தாா்.

தங்களது மகன்கள் இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில், பெருமாள் பாண்டியனும், உமா மீனாட்சியும் வீட்டில் இருந்துள்ளனா். அப்போது பகல் சுமாா் 1 மணியளவில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பெருமாள்பாண்டியன், மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த உமா மீனாட்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து பெருமாள் பாண்டியனும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வெளியே சென்றிருந்த சுந்திரசுகிா்தன் பிற்பகல் 2 மணியளவில் வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளாா். அப்போது வீட்டின் முன்பக்க அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெருமாள் பாண்டியன் இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளாா். மேலும் இன்னொரு அறையில் அவரது தாயாா் உமா மீனாட்சி ரத்தம் வழிந்தோடிய நிலையில் இறந்து கிடந்ததைப் பாா்த்து கதறியுள்ளாா். அவரது கூச்சல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா், போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனா்.

செல்லூா் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா் சிவபிரசாத் நிகழ்விடத்தை நேரில் பாா்வையிட்டாா். இச்சம்பவம் குறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com