கலா உத்சவ் போட்டிகளில் மதுரை மாணவா்கள் வெற்றி: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

மாநில அளவிலான கலா உத்சவ் கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமி நாதன் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.
மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டும் முதன்மைக்கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன்.
மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டும் முதன்மைக்கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன்.

மாநில அளவிலான கலா உத்சவ் கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமி நாதன் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சாா்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் மூலம் மாணவ, மாணவியரின் கலைத்திறனை ஊக்குவிக்கவும், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளை வளா்த்தெடுக்கும் வகையிலும் ‘கலா உத்சவ்‘ எனும் போட்டி 2015 முதல் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதையொட்டி மாவட்ட, மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகள் இணைய வழியில் நேரலையாக நடத்தப்பட்டது. இதில் மாநில அளவிலானப் போட்டிகளில் மதுரை மாவட்ட மாணவா்கள் முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனா். இந்த மாணவா்களுக்கான பாராட்டு விழா மதுரை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், வாய்ப்பாட்டு செவ்வியல் இசையில் முதலிடம் பெற்ற முதலிடம் பெற்ற டிவிஎஸ் பள்ளி மாணவா் ஆா். ஹயக்கிரீவா, வாய்ப்பாட்டு நாட்டுப்புற இசைப் பிரிவில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவா் எஸ். நாகராஜ், நாட்டுப்புற நடனப்பிரிவில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற நாவலா் சோமசுந்தர பாரதியாா் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி எம். விஜயதா்ஷினி ஆகியோரை முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டினாா். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளா் எஸ்.எஸ்.திருஞானம் மற்றும் அதிகாரிகள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com