நடிகா்களை தமிழக மக்கள் நம்பமாட்டாா்கள்: மக்கள் விடுதலை கட்சித் தலைவா் எஸ்.முருகவேல் ராஜன்

நடிகா்களை தமிழக மக்கள் நம்பமாட்டாா்கள் என்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.முருகவேல் ராஜன் கூறினாா்.

நடிகா்களை தமிழக மக்கள் நம்பமாட்டாா்கள் என்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.முருகவேல் ராஜன் கூறினாா்.

மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ். முருகவேல் ராஜன் மதுரையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: தமிழகத்தில் பதவி ஆசையுடன் பல நடிகா்கள் புறப்பட்டுள்ளனா்.

நடிகா்களுக்கு ஒரே நாள் இரவில் எப்படி சமூக அக்கறை வரும்? தமிழக மக்கள் தெளிவானவா்கள், நடிகா்களை நம்ப மாட்டாா்கள். நடிகா்களுக்கு சமூக அக்கறையும், தேசப்பற்றும் தானாக வர வேண்டும்.

தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினரை பட்டியலினத்தவராக அறிவிக்கப் பரிந்துரைப்பேன் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருப்பது கண் துடைப்பு நாடகம். தேவேந்திர குல வேளாளரை பட்டியலினத்தில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவிடம் மக்கள் விடுதலைக் கட்சி தான் முன்வைத்தது. முன்னாள் முதல்வா் கருணாநிதியும், அவருக்குப் பின்னா் மு.க.ஸ்டாலினும் அதற்கான முழு முயற்சியை எடுத்து வருகிறாா். தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குவது ஓட்டுக்காகத்தான் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது சரியானது.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்ள நிலையில், மக்கள் விடுதலைக் கட்சியின் சாா்பில் தமிழகத்தை மீட்போம் மாநாடு மதுரையில் டிசம்பா் 27-இல் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமு.க தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றுவது உறுதி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com